BENEFITS OF OIL MASSAGE IN TAMIL: எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக தலைமுடிக்கு ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தம் குறைவது என நேரடி மற்றும் மறைமுகமாக ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
இப்படி தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
முடி நன்கு ஆரோக்கியமாக இருக்க நாம் முடியை அதிக கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் மிக முக்கியமான ஒன்று ஆயில் மசாஜ். இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்துகொள்வது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கைகளில் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலையில் முதலில் முன்னிருந்து பின்னால் கோதி விட வேண்டும். எண்ணெய் தலை முழுவதும் பரவிய உடன் கைகளின் விரல்கள் மட்டும் தலையில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
வீட்டில் வயதான பெண்கள் இருந்தால் அவர்களிடம் இப்படி மசாஜ் செய்யச் சொல்லுங்கள். அவர்கள் செய்யும் பொழுது அது தலை முழுவதும் நன்றாக மசாஜ் செய்ய வழிவகுக்கும். இப்படி தொடர்ந்து தினமும் இரவு மசாஜ் செய்துவிட்டு அப்படியே உறங்கச் செல்ல வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளிக்கலாம்.
இப்படி இரவில் நீங்கள் தலைக்கு மசாஜ் செய்வதால் உங்கள் தலைமுடி புத்துணர்வு பெறுவது மட்டுமல்ல, உங்களுடைய மன அழுத்தமும் வெகுவாக குறையும். தலையில் எண்ணெய் தடவி அரை மணிநேரம் மசாஜ் செய்யும் பொழுது உங்கள் மன அழுத்தம் வேகமாக குறைந்து விடும்.
தொடர்ந்து எண்ணெய் மசாஜ் செய்யும் பொழுது உங்கள் தலைமுடி வேர்க்கால்களில் காணப்படும் துளைகள் சுத்தமாகி திறக்கிறது. மேலும் ரத்த ஓட்டம் சரியான அளவில் கிடைக்கப்பெற்று வேர்க்கால்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தருகிறது.
இதனால் வேர்க்கால்கள் ஆரோக்கியமின்மையால் ஏற்படக்கூடிய வறட்சியான முடி, முடி உதிர்தல், முடி உடைதல், சக்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் வெகுவாக குறையும். எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் எண்ணெய் முடி வேர்க்கால்கள் மூலம் எண்ணெய் உறிஞ்சப்பட்டு பிளவு முடிகள் ஏற்படாமல் தடுத்து, முடி உதிர்வையும் தடுத்து நிறுத்தும்.
உச்சந்தலையில் தோல் துளைகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்கள் மற்றும் அரிப்பு எரிச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
சில நேரங்களில் நோய்த்தொற்று தலைவலிக்கும் வழிவகுக்கும். கூந்தல் உதிர்வதற்கு காரணமாக அமைந்துவிடும். இதனை எல்லாம் நாம் செய்யும் எண்ணெய் மசாஜ் குணமாக்குகிறது.
பெண்களின் கூந்தலுக்கு ஏற்படும் இன்னொரு முக்கியமான பிரச்சனை பொடுகுத் தொல்லை. காலநிலை மாற்றங்கள், சுற்றுப்புற மாசுக்கள், ஆரோக்கிய குறைபாடுகள், சத்துக்கள் உடலில் குறைந்து போதல் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக பொடுகு தலையில் ஏற்படுகிறது.
பொடுகு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் தொகுப்பு. குறிப்பாக வறண்ட கூந்தலில் உள்ள தோல் சுரப்பிகளிலிருந்து எண்ணெய் தன்மை கிடைக்கப்பெறாமல் ஈரப்பதம் இல்லாமல் முடி வறண்டு காட்சியளிக்கும்.
இதற்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலமாக சுரப்பிகளையும் தூண்ட முடியும். மேலும் தலையில் இயற்கையான எண்ணெயை உற்பத்தி செய்ய உதவும்.
BENEFITS OF OIL MASSAGE IN TAMIL: முடி அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் குளித்து முடித்து விட்டு தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது. இது தூசுகளை உங்கள் முடியில் ஒட்ட வைத்து விடும். இதனால் முடி அழகிழந்து காணப்படும்.
தலைமுடி பிரச்சனை அதிகம் இருப்பவர்கள் இந்த எண்ணெய் மசாஜ் முறையை தொடர்ந்து செய்து வாருங்கள். ஒரு சில வாரங்களில் உங்கள் முடியில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து முடி ஆரோக்கியமாக இருக்கும்.
இரவில் ஹேர் ஆயில் மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லும் பொழுது தலையணை மீது ஒரு காட்டன் துணியை விரித்து படுத்தால் தலையில் உள்ள எண்ணெய் தலையணையில் ஒட்டாது. இரவில் எண்ணெய் மசாஜ் செய்து முடித்த பிறகு சீப்பு உபயோகித்து தலையை வாரக்கூடாது.