HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: எங்களுடைய TAMILDAYTODAY இணையதளத்தில் முக்கியமான நாட்கள் குறித்த வரலாறு, வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் விரிவாக காணலாம்.

வாட்சப்பில் நாம் தவறுதலாக அனுப்பும் பதிவுகளை எடிட் செய்வதற்கான வசதியை தற்போது வாட்சப் வழங்கியுள்ளது.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP

அய்யய்யோ தெரியாமல் அனுப்பிட்டேனே… போச்சு..! அனுப்பிய பதிவில் நிறைய தவறு ஏற்பட்டுவிட்டது என புலம்பும் நிறைய வாட்சப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: வாட்சப்பின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பதிவை அனுப்பினால் … அது அவ்வளவுதான் அதனை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது.

சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் பதிவுகளை டெலிட் ஃபார் மீ.. அல்லது டெலிட் ஃபார் எவரிஒன் போன்ற தேர்வுகளை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்க முடியும்.

இந்த வசதி வந்தவுடன் வாட்சப்பில் தவறுதலாக அனுப்பும் பதிவுகளை எளிதாக நீக்குவதற்கு பயனாளர்களுக்கு ஓர் வாய்ப்பாக அமைந்தது.

வாட்சப் புதிய புதிய அப்டேட்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஃஸ்டேட்டஸில் குரல் பதிவுகளை வைக்கும் முறையை வாட்சப் அறிமுகப்படுத்தியது. இது வாட்சப் பயனாளர்களை வெகுவாக கவர்ந்தது.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: அதேபோல கணினி அல்லது லேப்டாப்பில் வாட்சப் பயன்படுத்துவோர் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை பயன்படுத்தும் முறையை பீட்டா வெர்சன் அறிமுகம் செய்தது.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP

இதன் மூலம் ஒரு கணினியிலோ அல்லது லேப்டாப்பிலோ வாட்சப்பை லாக் அவுட் செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதேபோல நாம் வாட்சப் பயன்படுத்தும் மொபைல் போனில் நெட்வொர்க் அல்லது இன்டெர்நெட் வசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கணிணியில் இருந்தால் போதுமானது. இதனை மல்டி டிவைஸ் பீட்டா வெர்சன் என அழைப்பட்டது.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: தற்போது வாட்சப் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதன்படி நாம் ஒரு நபருக்கு தவறுதலாக எழுத்துப் பிழையுடன் பதிவுகள் அனுப்பிவிட்டால் பதறிப் போய் உடனே டெலிட் ஃபார் எவரிஒன் செய்யத் தேவையில்லை.

மாறாக நாம் அனுப்பிய பதிவை எடிட் செய்து அதில் இருக்கும் எழுத்துப் பிழைகளை சரிசெய்யவோ அல்லது அந்த சில வார்த்தைகளை நீக்கவோ, சேர்க்கவோ செய்து கொள்ளலாம். நாம் பதிவை அனுப்பிய 15நிமிடங்களுக்குள் இவற்றை எடிட் செய்யும்படியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மொபைலில் வாட்சப் பயன்படுத்துவோராக இருந்தால் இந்த வசதியை பெற காத்திருக்க வேண்டும். காரணம் என்னவெனில் தற்போதைய அப்டேட் பீட்டா வெர்சன் வாட்சப்பை இணையதளத்தில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: இந்த சேவை மொபைலில் கொண்டு வருவதற்கான பணிகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பீட்டா வெர்சன் வாட்சப்பை இணையத்தில் பயன்படுத்தும் ஒருநபர் மொபைலில் வாட்சப் பயன்படுத்தும் நபருக்கு பதிவை அனுப்பி அதில் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் அவர் கடைசியாக மாற்றம் செய்த பதிவை மட்டுமே மொபைல் பயனாளரால் பார்க்க முடியும்.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP

இதுவே பீட்டா வெர்சன் வாட்சப் பயன்டுத்துவோரால் அவர் என்ன என்ன மாற்றங்களையெல்லாம் செய்தார் என்பதையும் சேர்த்து பார்த்துக் கொள்ளலாம்.

HOW TO EDIT ALREADY SENT ON WHATSAPP: மெட்டா நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் எடிட் செய்யும் வசதி இருக்கிறது. மேலும் ஃபேஸ்புக் கணக்காளர் அந்த பதிவில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் செய்தார் என்பதையும் மற்றொரு நபரால் பார்க்க இயலும்.

வாட்சப் போன்ற சாட்டிங் செய்து கொள்ளும் மற்றொரு செயலியான டெலிகிராமில் எடிட் செய்து கொள்ளும் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *