HAPPY EASTER IN TAMIL 2

EASTER SUNDAY IN TAMIL 2023: எங்களுடைய TAMILDAYTODAY இணையதளத்தில் முக்கியமான நாட்கள் குறித்த வரலாறு, வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் விரிவாக காணலாம்.

கிறிஸ்துவ மக்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

EASTER SUNDAY IN TAMIL 2023: யேசு கிறிஸ்து, அதிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்’ பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவலாக கோடிக்கணக்கான மக்களால் பின்பற்ற கூடிய மதமாக கிறிஸ்துவ மதம் உள்ளது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்துமஸிற்கு அடுத்து மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர்.

HAPPY EASTER IN TAMIL 1

சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து, அதிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்’ பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஈஸ்டர் 2021 ஏப்ரல் 4 கொண்டாடப்படுகிறது.

பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி கி.பி 30- இல் இயேசு கிறிஸ்து ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஈஸ்டர் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் “பரிசுத்த வியாழன்” அதாவது மான்டி வியாழன் (Maundy Thursday) நினைவு கூறப்படுகிறது.

EASTER SUNDAY IN TAMIL 2023: புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னரே தன் சீடர்களிடம் நான் மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று இயேசு குறிப்பிட்டிருந்தார்.

கல்லறையில் இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருப்பதை கண்டனர். எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது.

HAPPY EASTER IN TAMIL 3

இந்த காரணத்திற்காகவே பலர் அவரை ‘கடவுளின் மகன்’ என்று அழைக்கிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கொண்டாடுகிறார்கள்.

இருப்பினும் பழங்காலத்தில் தற்போதைய நம்பிக்கைக்கு மாறாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் நாளாக ஈஸ்டர் கொண்டாடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பண்டைய மக்கள் பெரும்பாலான நேரங்களை வெளியில் கழித்தனர். பருவங்களும் வானிலையும் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தன.

EASTER SUNDAY IN TAMIL 2023: எனவே வசந்த காலத்தின் துவக்கத்தில் ஒரு கொண்டாட்டமாக இந்நாள் முன்னர் அனுசரிக்கப்பட்டு வந்த வரலாறுகளும் உள்ளன. வசந்த காலத்தின் துவக்கத்தில் கிறிஸ்தவத்திற்கு முந்தைய மதமாக கருதப்படும் pagan Saxon பாரம்பரியத்தில் ஈஸ்டர் நாள் அனுசரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

HAPPY EASTER IN TAMIL  4

ஆரம்பகால மிஷனரிகள் Saxon-களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய போது கூடவே பாரம்பரிய மாற்றம் ஏற்பட்டது. அதனுடன், புதிய பாரம்பரியத்தை குறிக்கும் பொருட்டு ஈஸ்டர் அர்த்தமும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டது.

கொண்டாட்டத்தின் நாள் மாறி அது ஈஸ்டர் என்று அறியப்பட்டது என்றும் ஒரு வரலாறு உண்டு. பேகன் மற்றும் அரேபியன் சூரிய பண்டிகைகளை உள்ளடக்கியதே ஈஸ்டர் என்றும் கூறப்படுகிறது

இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள்.பொதுவாக ஈஸ்டர் பண்டிகையின்போது பரிசுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஈஸ்டர் தினத்தன்று முட்டை மறைத்து வைக்கப்பட்டு பரிசாக வழங்கப்படும்.

முட்டை அலங்கரித்தல் போன்ற விளையாட்டுகளும் அடங்கும். பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. முந்தைய கிறிஸ்துவத்தில் சில pagan மரபுகளில் முட்டையானது கருவுறுதல் மற்றும் பிறப்பை குறித்ததாக நம்பப்படுகிறது.

எனவே ஈஸ்டர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முட்டை அலங்கரித்தல் மாறியிருக்கலாம். அதாவது இயேசுவின் உயிர்த்தெழுதல் அல்லது மறுபிறப்பை குறிக்கும் வகையிலும் ஈஸ்டர் தினத்தில் முட்டைகள் பயன்படுத்தும் வழக்கம் வந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *