TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 19 – சிற்பி திட்டம் / SIRPI SCHEME

TAMIL

 • சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகரகாவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை முடிவெடுத்தது.
 • இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில், ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறைநடவடிக்கை எடுத்தது.
 • குறிப்பாக, சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களைக் கொண்டு இந்த சிற்பி திட்டத்தை சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது.
 • சிற்பி’ என்றாலும் அது குறிக்கும் ஆங்கில விரிவாக்கம் வேறு. அதாவது Students in Responsible Police Initiatives என்பதன் சுருக்கம்தான் Sirpi.
 • இத்திட்டப்படி, 8-ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு தனி சீருடைவழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
 • அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
 • இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண்,காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் பள்ளிமாணவர்களின் தகவல்களைபெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ENGLISH

 • To prevent the increasing crime in Chennai, the Municipal Police Department is taking various measures.
 • As part of this, the Chennai Police Department decided last year to launch a new program for the betterment of children.
 • Accordingly, the Police Department has taken steps to introduce a program called ‘Sirpi’ in Chennai to tackle juvenile delinquency and identify and guide vulnerable children.
 • Specifically, the Chennai Metropolitan Police Department is implementing this sculpture program with 50 students each in 100 municipal schools in Chennai.
 • Sirpi though the English expansion of what it means is different. Sirpi stands for Students in Responsible Police Initiatives.
 • According to this scheme, students from class 8 onwards will be selected and given a separate uniform. The police department is planning to implement the program like the National Student Corps (NCC) in schools.
 • Also, the program includes taking students on tours, taking them to reputed educational institutes to enhance their skills, and imparting legal literacy in collaboration with government and non-government organizations to make them socially responsible.
 • Apart from this, the program has also provided information to the students about emergency numbers including police control room emergency number, Kavalan app, elderly helpline, police arms and also to create awareness among them.
 • Also, it is planned to provide appropriate training to the school children in order to obtain information about the measures taken by the government to prevent the movement of drugs.

சர்வதேச தொழிலாளர்கள் நிலை குறித்து ஐநா அறிக்கை / UN REPORT ON STATUS OF INTERNATIONAL WORKERS

TAMIL

 • கடந்தாண்டு இறுதி வரையில் 2.8 கோடி மக்கள், தங்களுக்கு விருப்பம் இல்லாத வேலையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 2.2 கோடி மக்கள் கட்டாய திருமணம் செய்து வாழ்கின்றனர்.
 • நவீன அடிமைத்தனமாக கருதப்படும் இதில், உலகம் முழுவதும் 5 கோடி மக்கள் பாதித்துள்ளனர். வரும் 2030க்குள் இதுபோன்ற அனைத்து விதமான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிப்பதற்கான முக்கிய முடிவுகளை ஐநா எடுக்கும்.
 • கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு மட்டுமே நவீன அடிமைத்தனத்தின் எண்ணிக்கை 93 லட்சம் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, கொரோனா பரவல் காலக்கட்டம், பருவநிலை மாற்றம், புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 • இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். இவர்களில் 50 சதவீதம் பேர், வணிகரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

ENGLISH

 • By the end of last year, 2.8 crore people were forced to engage in involuntary work. 2.2 crore people live in forced marriage.
 • Considered as modern slavery, it affects 50 million people worldwide. The UN will take key decisions to end all forms of modern slavery by 2030.
 • Compared to last year 2016, the number of modern slavery has increased by 93 lakhs last year alone.
 • In particular, this number has increased due to the period of corona spread, climate change and geopolitical conflicts. Most of them are women and children. 50 percent of them are victims of commercial sexual harassment.

மனித வளர்ச்சிக் குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022

TAMIL

 • மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாக கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும்.
 • கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சி குறியீடு 130வது இடத்தில் உள்ளது.
 • மனித வளர்ச்சிக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. நடுத்தர மனித வளர்ச்சி அடைந்த 43 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
 • கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 189 நாடுகளில் 131வது இடத்தைப் பிடித்தது. அதாவது இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 2020ல் 0.62 ஆக இருந்தது.
 • அதே 2021ல் 0.633 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் 129வது இடத்தில் இருந்த இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் கீழே இறங்கி வருகிறது. ஆனால் இந்தியர்களின் ஆயுட்காலம் 69.7ல் இருந்து 67.2 ஆக அதிகரித்துள்ளது.
 • இந்தப் பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 73வது இடத்திலும், சீனா 79வது இடத்திலும், பாகிஸ்தான் 161வது இடத்திலும், வங்கதேசம் 129வது இடத்திலும், பூடான் 127வது இடத்திலும், நேபாளம் 143வது இடத்திலும், மியான்மர் – 149வது இடத்திலும் உள்ளன.

ENGLISH

 • Overall development of a country can be known on the basis of Human Development Index. India’s Human Development Index ranks 130th in the Human Development Index of nearly 191 countries.
 • The top three countries in the Human Development Index are Switzerland, Norway and Iceland. India is one of the 43 countries with medium human development.
 • According to the 2020 study, India ranked 131 out of 189 countries in the Human Development Index. That means India’s Human Development Index in 2020 was 0.62.
 • In the same year 2021 it decreased to 0.633. India, which was ranked 129th since 1990, has been slipping down every year. But the life expectancy of Indians has increased from 69.7 to 67.2.
 • In this list, India’s neighbors Sri Lanka at 73rd position, China at 79th position, Pakistan at 161st position, Bangladesh at 129th position, Bhutan at 127th position, Nepal at 143rd position and Myanmar at 149th position.

மாதிரிப் பள்ளிகள் / MODEL SCHOOL

TAMIL

 • உறைவிட வசதியுடன் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.
 • மேலும் 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டுகள் மற்றும் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்கு உரிய தகுதிகளாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
 • மேலும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
 • அந்த வகையில், இந்த கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்பட உள்ளது. மேலும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
 • வரும் ஆண்டுகளில் மாவட்டத்தில் ஒரு மாதிரிப்பள்ளி என்கிற அடிப்படையில் மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன

ENGLISH

 • Model schools with boarding facilities are to be started. Students who score more than 400 marks in class 10 will be admitted to model schools. Apart from the 10th standard score, NTSE National Aptitude Test, NMMS National Merit Test, sports and arts have also been decided as eligibility criteria for admission to model schools.
 • And in the best institutes of higher education, trainings will be provided on the basis of entrance examination in model schools to ensure the opportunity to study together in science, technology, engineering, arts and medicine in professional education.
 • Accordingly, 15 government schools in the districts of Chennai, Madurai, Tirupattur, Nilgiris, Tiruvarur, Sivagangai, Erode, Ramanathapuram, Tirunelveli, Coimbatore, Thiruvallur, Vellore, Nagapattinam and Iranipet will be started as model schools this academic year.
 • Also, admission to model schools will be done following the government’s seat reservation policy and based on the overall performance of the students. In the coming years, the number of model schools will be increased in the district on a model school basis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *