TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 9: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

  1. முக்கியமான ஊட்டச்சத்துகளும், அதன் குறைபாட்டுக்கான காரணங்களும் / IMPORTANT NUTRIENTS AND CAUSES OF DEFICIENCY

TAMIL

  • ஊட்டச்சத்து குறைபாடு மோசமான உணவுகளால் உண்டாகும் பிரச்சனை, ஆரோக்கியமான உணவுகளே என்றாலும் சரியான முறையில் எடுக்காததாலும் கூட இவை உண்டாகிறது.
  • உணவுகள் ஆரோக்கியமாக இருந்தாலும் அவை சரியானதாக இருக்க வேண்டும். அவற்றில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை எனில் இது நாளடைவில் பெருங் குறைபாட்டை உண்டாக்கிவிடும்.
  • ஒவ்வொரு ஊட்டச்சத்து குறையும் போதும் உடல் பல உபாதைகளை சந்திக்க செய்யும். உடலுக்கு வேண்டிய முக்கியமான ஊட்டசத்துகள் என்னென்ன, எதனால் இந்த குறைபாடு உண்டாகிறது என்று பார்க்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு

  • உடல் ஆரோக்கியமாக நோய் தடுப்பாற்றலுடன் இருக்க உடலுக்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நுண்னூட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன
  • உடல் போதுமான அளவு பெறாத போது தேவையான அளவு குறிப்பிட்ட ஊட்டச்சத்து உணவில் இருந்து உறிஞ்ச முடியாத போது ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகிறது. இது தொடர்ந்தால் நீடித்தால் ஆபத்தை உண்டாக்கும்.
  • உங்கள் உடலால் நுண்ணூட்டச்சத்துக்களை உருவாக்க முடியாது. உணவின் மூலம் தான் பெறமுடியும். வைட்டமின் ஏ, அயோடின், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் போன்றவை பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளில் முக்கியமானவை. இவை மோசமான பேரழிவை உண்டாக்க கூடியவை.

ஊட்டச்சத்து குறைபாடின் அறிகுறிகள்

  • ஊட்டச்சத்து குறைபாடுகள் பலவீனமான அறிவாற்றல், கரோனரி தமனி நோய், கண் நோய், நோய்த்தொற்றுகள், புற்றூநோய், நீரிழிவு நோய், வீக்கம், உடல் பருமன் போன்றவை அடங்கும்.
  • இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பது முக்கியம். அதனால் இதற்கான அறிகுறிகளை தடுப்பது முக்கியமானது. சோர்வு, வெளிர்ந்த தோல், தூக்கம், சுவாசக்கோளாறுகள், இதயத்துடிப்பு, மோசமான செறிவு, மூட்டுகளில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, முடி உதிர்தல் மற்றும் தலைவலி போன்றவை இருக்கலாம். ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கான அறிகுறிகள்.

இரும்புச்சத்து குறைபாடு காரணம்

  • உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய போதுமான இரும்பு இல்லாத போது, இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை உருவாக்கலாம். ஹீமோகுளோபின் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுவதால் இந்த குறைபாடு இரத்த இழப்புக்கு முக்கிய காரணம்.
  • அதிலும் பெண்கள் மாதவிடாய் உதிரபோக்கால் பெண்கள் இன்னும் இரும்புச்சத்து ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். உணவில் இரும்புச்சத்து இல்லாதது கூட இந்த குறைபாட்டுக்கு வழி வகுக்கும்.
  • பெருங்குடல் புற்றுநோய் குடல் இறக்கம் போன்றவையும் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். உணவில் போதுமான இரும்பு இல்லாத போது அது தொடரும் போது இரும்புச்சத்து குறைபாடு உண்டாகும்.

அயோடின் குறைபாடு காரணம்

  • நம் உடல் அயோடினை உற்பத்தி செய்வதில்லை. இது உணவின் மூலம் தான் பெறமுடியும். அயோடின் குறைபாடு ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்துகிறது.
  • ஆண்களை விட பெண்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். தைராய்டு நோயின் குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கு தைராய்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • கர்ப்பிணி பெண்களுக்கும் அயோடின் குறைபாடு வருவதற்கான வாய்ப்பு உண்டு. கருவின் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு அயோடினின் பங்கு அவசியம். இதனால் கர்ப்பிணிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் இளந்தாய்மார்களுக்கும் அதிக அயோடின் தேவை. வழக்காமான அயோடின் அளவு பற்றாக்குறையை உண்டாக்கலாம்.
  • உணவில் மூலம் போதுமான அயொடினை எடுத்துகொள்ளாத போது அயோடின் குறைபாடு ஏற்படுகிறது.
  • ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இந்த ஹைப்போ தைராய்டிசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வைட்டமின் ஏ குறைபாடு காரணம்

  • வைட்டமின் ஏ குறைபாட்டுக்கு காரணம் சரியான உணவை திட்டமிட்டு எடுக்காததுதான்.
  • உடலில் சில சுகாதாரமான நிலைமைகள் உடலில் வைட்டமின் ஏ உறிஞ்சுதலை தலையிடக்கூடும்.
  • கைக்குழந்தைகள், குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் வைட்டமின் ஏ குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறார்கள்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடு

  • வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது வைட்டமின் பி குழுவின் கலவையாகும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது சிக்கல்களை உண்டாக்கும்.
  • க்ரோன் நோய், செலியாக் நோய், எச்.ஐ.வி மற்றூம் ஆல்கஹால் பயன்பாடு கொண்டிருப்பவர்களுக்கு உடல் பி வைட்டமின்களை உறிஞ்சுவதை தடுக்க செய்கிறது. மேலும் இது குறைபாடுகளுக்கான் ஆபத்தை அதிகரிக்க செய்யும்.
  • பெண்களுக்கு ஃபோலேட் குறைபாடு நரம்புக்குழாய் குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும் அபாயத்தை உண்டாக்குகிறது. ஆல்கஹால் பயன்பாட்டு கோளாறு உள்ளவர்கள் மற்றும் பெண்கள் ஃபோலே குறைப்பாட்டின் அபாயத்தில் இருக்கிறார்கள்.

வைட்டமின் சி குறைபாட்டுக்கான காரணங்கள்

  • வைட்டமின் சி குறைவாக உள்ள உணவுகளை நுகர்வதால் இது உண்டாகிறது. பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுக்காதது.
  • இவை குறைவாக இருக்கும் காய்கறிகளை எடுப்பதால் இந்த குறைபாடு உண்டாகலாம். வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகமாக சமைக்கும் போதும் இந்த சத்து அழிக்கப்படலாம்.
  • கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், காய்ச்சல் அல்லது வீக்கத்தை உண்டாக்கும் கோளாறுகளை கொண்டிருப்பவர்கள், தைராய்டு சுரப்பி கோளாறுகள் கொண்டிருப்பவர்களுக்கு இந்த குறைபாடு நேரிடலாம்.

வைட்டமின் டி குறைப்பாட்டுக்கான காரணங்கள்

  • சூரிய ஒளியை நீங்கள் பெறாத நிலையில் உங்கள் சரும்ம வைட்டமின் டி உற்பத்தி செய்வதில் பிரச்சனையை கொண்டிருக்கலாம். சூரிய ஒளியில் சென்றாலும் அதிகப்படியான சன்ஸ்க்ரீன், உறைகளை அணிவது என எல்லாமே வைட்டமின் டி அபாயத்தை உண்டாக்க செய்யலாம். இவர்களுக்கு குளிர் காலத்தில் அதிகமான பாதிப்பு உண்டாக செய்யும்.
  • சருமம் கருமை நிறத்தில் இருப்பவர்களுக்கு இந்த குறைபாடு உண்டாகலாம். வைட்டமின் டி தயாரிப்பை கருப்பு நிற சருமம் குறைக்கிறது.ஆய்வுகளின் படி கருப்பு நிற சருமம் கொண்டவர்களுக்கு ஆபத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
  • வயதானவர்களுக்கு இந்த அபாயம் அதிகமாக இருக்கும். செரிமான பாதையில் வைட்டமின் டி போதுமான அளவு உறிஞ்ச முடியாத போது இந்த குறைபாடு உண்டாகலாம்.
  • உடல் பருமனாக இருக்கும் போது வைட்டமின் டி கொழுப்பு செல்கள் முலம் பிரித்தெடுக்கப்பட்டு அதன் வெளியீட்டை புழக்கத்தில் மாற்றுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டெண் உள்ளவர்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருக்கும்.

கால்சியம் குறைபாட்டுக்கான காரணங்கள்

  • கால்சியம் குறைபாட்டுக்கு காரணங்கள் பலவும் உள்ளன. கால்சியம் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் டி குறைபாடு கால்சியம் அளவையும் குறைத்துவிடுகிறது.
  • கால்சியம் குறைபாட்டுக்கு ஹைப்போதைராய்டிசம் மற்றொரு காரணம் ஆகும். இந்த நிலை அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அல்லது மரபணு காரணங்களால் ஏற்படலாம்.
  • சிறுநீரக கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், வைட்டமின் டி குறைபாடு மற்றும் அதன் விளைவாக கால்சியம் குறைபாடு போன்றவையும் உண்டாகலாம்.

மெக்னீசியம் குறைபாட்டுக்கான காரணங்கள்

  • குடலில் மெக்னீசியம் உறிஞ்சுதல் அல்லது சிறுநீர்ல் மெக்னீசியம் வெளியேற்றப்படுவதால் இவை உண்டாகிறது. இல்லையெனில் ஆரோக்கியமான மக்களுல் குறைந்த மெக்னீசியம் அளவு என்பது அசாதாரணமானது.
  • மெக்னீசியம் அளவு பெரும்பாலும் சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படுவதே இதற்கு காரணம் ஆகும். உடலுக்கு தேவையானதை அடிப்படையாக கொண்டு சிறுநீரகங்கள் மெக்னீசியத்தின் வெளியேற்றத்தை அதிகரிக்கின்றன.

ஜிங்க் குறைபாட்டுக்கான காரணங்கள்

  • மெக்னீசியம் குறைந்த உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துகொள்வதன் மூலம் அதிகப்படியான நாள்பட்ட இழப்பு ஹைப்போமெக்னீசிமியாவுக்கு வழிவகுக்கும்.
  • இது வயதானவர்கள், டைப் 2 நீரிழிவு, கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்கள், ஆல்கஹால் பயன்பாடு போன்றவையும் காரணமாகிறது.
  • துத்தநாகம் குறைந்த உணவுகளை எடுத்துகொள்வது இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு முக்கிய காரணம். நீங்கள் போதுமான அளவு துத்தநாகத்தை உட்கொண்டாலும் உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அது துத்தநாக அளவை குறைத்துவிடும் அபாயம் உண்டு.
  • சில மருந்துகள் மற்றும் பிற ஊட்டசத்துகள் உங்கள் துத்தநாகத்தை உறிஞ்சுவதில் தடுக்க செய்யலாம். இதனாலும் குறைபாடு உண்டாகலாம். இது தவிர க்ரோன் நோய், பெருங்குடல் அழற்சி, குடல் நிலைகள், ஆல்கஹால், நீரிழிவு நோய் புற்றுநோய் போன்றவை துத்தநாக குறைப்பாட்டை உண்டாக்கும்.

ENGLISH

  • Nutritional deficiency is the problem with bad foods is that they are also caused by not consuming the right amount of healthy foods.
  • Even if the foods are healthy, they should be correct. If they don’t have the right nutrients, this can eventually lead to serious deficiencies.
  • Every nutrient deficiency causes the body to experience many ailments. Let’s see what the important nutrients the body needs are and what causes this deficiency.

Nutritional deficiency

  • The body needs many vitamins and minerals to maintain a healthy immune system. These vitamins and minerals are called micronutrients
  • Malnutrition occurs when the body cannot absorb the required amount of specific nutrients from food when it does not get enough. This can be dangerous if continued.
  • Your body cannot make micronutrients. It can only be obtained through food. Vitamin A, iodine, folate and iron deficiencies are important among the common nutritional deficiencies. These can cause serious damage.

Symptoms of malnutrition

  • Nutritional deficiencies include cognitive impairment, coronary artery disease, eye disease, infections, cancer, diabetes, inflammation, obesity, etc.
  • It is important to prevent this nutritional deficiency.
  • So preventing these symptoms is important.
  • Fatigue, pale skin, drowsiness, breathing problems, palpitations, poor concentration, tingling in the joints, numbness, hair loss and headaches may occur.

Iron Deficiency

  • Iron deficiency anemia can develop when the body does not have enough iron to produce hemoglobin.
  • This deficiency is a major cause of blood loss as hemoglobin helps carry oxygen throughout the body.
  • Women face even more iron risk as women go through menopause. A lack of iron in the diet can also lead to this deficiency.
  • Colorectal cancer and bowel cancer can also cause iron deficiency. Iron deficiency occurs when there is not enough iron in the diet.

Iodine Deficiency

  • Our body does not produce iodine. It can only be obtained through food. Iodine deficiency causes hypothyroidism.
  • Women are more likely to develop hypothyroidism than men. People with a family history of thyroid disease are more likely to develop hypothyroidism.
  • Pregnant women are also prone to iodine deficiency. The role of iodine is essential for fetal growth and brain development. Therefore, pregnant and lactating mothers need more iodine. Normal iodine levels can cause deficiency.
  • Iodine deficiency occurs when you do not get enough iodine from your diet. Women are more likely to develop hypothyroidism than men.

Vitamin A deficiency

  • Vitamin A deficiency is caused by not taking proper diet plan. Certain health conditions in the body can interfere with the absorption of vitamin A in the body.
  • Infants, children, pregnant women and lactating women are at risk of developing vitamin A deficiency.

Vitamin B complex deficiency

  • Vitamin B complex is a combination of vitamin B group. Any deficiency in this can cause problems.
  • People with Crohn’s disease, celiac disease, HIV and alcohol use can prevent the body from absorbing B vitamins.
  • It also increases the risk of defects.
  • Folate deficiency in women increases the risk of having a baby with neural tube defects. Men and women with alcohol use disorders are at increased risk of Foley deficiency.

Vitamin C Deficiency

  • It is caused by consuming foods that are low in vitamin C. Not taking a lot of fruits and vegetables.
  • Eating vegetables that are low in these can cause this deficiency. Even overcooking vitamin C-rich vegetables can destroy this nutrient.
  • Pregnant women, breastfeeding mothers, those with fever or inflammatory disorders, and those with thyroid gland disorders may be deficient.

Causes of Vitamin D Deficiency

  • Your skin may have trouble producing vitamin D when you don’t get enough sunlight. Even going out in the sun, wearing too much sunscreen and covering up can all cause vitamin D risks. They suffer more in winter.
  • Dark skinned people may have this deficiency. Black skin reduces the production of vitamin D. According to studies, people with dark skin are at risk.
  • The risk is higher in the elderly. This deficiency can occur when vitamin D is not absorbed adequately in the digestive tract.
  • During obesity vitamin D is sequestered by fat cells and released into the circulation. People with a body mass index of 30 or more have low levels of vitamin D.

Calcium Deficiency

  • There are many causes of calcium deficiency. Vitamin D deficiency, which is needed for calcium absorption, also lowers calcium levels.
  • Hypothyroidism is another cause of calcium deficiency. This condition can be caused by post-surgery or genetic reasons.
  • Kidney disorders, liver problems, vitamin D deficiency and consequent calcium deficiency can also occur.

Magnesium Deficiency

  • These are caused by absorption of magnesium in the intestine or excretion of magnesium in the urine. Low magnesium levels are uncommon in otherwise healthy people.
  • This is because magnesium levels are mostly regulated by the kidneys. The kidneys increase the excretion of magnesium based on what the body needs.

Zinc Deficiency

  • Chronic loss of excess from continuous intake of magnesium-poor foods can lead to hypomagnesemia.
  • It is also caused by elderly people, type 2 diabetes, chemotherapy treatment, alcohol use etc.
  • Consuming foods low in zinc is the main cause of this malnutrition. Even if you are consuming adequate amounts of zinc, there is a risk that your body may have low zinc levels if you have health problems.
  • Certain medications and other nutrients can inhibit your absorption of zinc. This can also cause a defect. Apart from this, Crohn’s disease, colitis, intestinal conditions, alcohol, diabetes, cancer etc can cause zinc deficiency.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *