TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 8: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

லோக்பால் / LOKPAL

TAMIL

  • லோக்பால் என்றால் மக்கள் காவலன் என்று பொருள். இந்த வார்த்தையை சட்ட வல்லுநர் எல்.எம்.சிங்வி 1963ல் அறிவித்தார்.
  • மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ஆணையங்களாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளை நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966 – 1970) பரிந்துரை செய்தது
  • தலைவர் – மொரார்ஜி தேசாய்
  • லோக்பால் மத்திய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகள் என்று அனைவரையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்தது.
  • லோக்பால் மசோதா முதன்முதலில் 1968ல் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 8 முறை லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தும் நிறைவேறவில்லை.
  • இறுதியாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா (2011) நிறைவேற்றப்பட்டு 2014 ஜனவரி 1ல் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது.
  • தேசிய சட்டப்பணிகள் ஆணைகள் வழிகாட்டுதலுடன் தேசிய அளவில் லோக்அதாலத் நடைபெற்றது.

ENGLISH

  • Lokpal means People’s Guardian. The term was coined by jurist LM Singhvi in ​​1963.
  • The Administrative Reforms Commission (1966-1970) recommended the Lokpal and Lok Ayukta bodies as special commissions for redressal of people’s grievances.
  • President- Morarji Desai)
  • Lokpal empowered to investigate all Union Ministers, Secretaries and State officials.
  • The Lokpal Bill was first introduced in the Lok Sabha in 1968. After that, 8 attempts were made to pass the Lokpal Bill but failed.
  • Finally the Lokpal and Lok Ayukta Bill (2011) was passed and received the President’s assent on 1 January 2014.
  • The Lok Adalat was held at the national level under the guidance of the National Legislature Orders.
  1. குறைகேள் அதிகாரி / OMBUDSMAN

TAMIL

  • ஸ்காண்டிநேவியன் நாட்டில் காணப்படும் குறைகேள் அதிகாரி அமைப்பானது முதன்முதலில் ஸ்வீடன் நாட்டில் 1809ல் தொடங்கப்பட்டது.
  • உலக அளவில் குடிமக்களின் குறையைத் தீர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட முதல் குறை தீர்க்கும் அமைப்பு இதுவாகும்.
  • நியூசிலாந்தில் இவ்வமைப்பு பாராளுமன்ற விசாரணை கமிஷனார் என்றழைக்கப்படுகிறது.
  • ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் சொத்துக்களை வழக்கு விசாரணையின்போது முடக்கவும் அதிகாரம் உள்ளது.

ENGLISH

  • The Scandinavian ombudsman system was first established in Sweden in 1809.
  • It is the first grievance redressal system created to redress the grievances of citizens at global level.
  • In New Zealand this body is called the Parliamentary Inquiries Commissioner.
  • It also has the power to freeze the assets of a person accused of corruption during the trial.
  1. மத்திய புலனாய்வு விசாரணை / CENTRAL BUREAU OF INVESTIGATION

TAMIL

  • சிபிஐ சுதந்திரமான அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக புதிய மசோதாவில் வழக்குகளுக்கான இயக்குநரை நியமிக்க வகை செய்கிறது.
  • வழக்குகளுக்கான இயக்குநர் மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் (CVC) பரிந்துரையில் நியமிக்கப்படுவார்.
  • லோக்பால் அனுமதிக்குப் பின்னரே வழக்குகளை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியும்.
  • பிரதமர் – லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரும் உள்ளடங்குவார். எனினும் பிரதமருக்கு எதிரான வழக்குகளில் சில விவகாரங்கள் மற்றும் குறிப்பிட்ட பணிகளில் விலக்கு அளிக்கப்படும்.

புலனாய்வு

  • வழக்குகளின் விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அபராதம்

  • தவறான மற்றும் போலியான புகார்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் ரூ.ஒரு லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
  • பொது ஊழியர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். தவறான குற்ற நடவடிக்கை தொடர்ந்த ஊழல் ஆகியவற்றிற்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ENGLISH

  • The new Bill provides for the appointment of a Director of Prosecutions to ensure that the CBI functions as an independent body.
  • The Director of Prosecutions will be appointed on the recommendation of the Central Corruption Vigilance Commission (CVC).
  • CBI officers investigating cases can be transferred only after approval of Lokpal.
  • Prime Minister – The scope of Lokpal inquiry includes the Prime Minister. However, in cases against the Prime Minister certain matters and certain functions are exempted.

Investigation

  • The investigation of the cases should be completed within 60 days.

Penalty

  • False and bogus complaints are punishable with imprisonment up to one year and fine up to Rs.one lakh.
  • 7 years imprisonment for public servants.
  • Corruption followed by misdemeanor criminal activity is punishable by up to 10 years in prison.
  1. லோக் ஆயுக்தா / LOK AYUKTAS

TAMIL

  • தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011ன் குறிப்பிடத்தக்க அம்சம்.
  • மாநிலங்கள் தங்கள் விதிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்புகளை நிறுவ வேண்டும்.
  • லோக் ஆயுக்தா மாநில அளவில் மக்கள் குறை தீர்ப்பவையாகவும், ஊழலுக்கு எதிரான அமைப்பாகவும் செயல்படுகிறது.
  • இந்தியாவில் முதல் லோக் ஆயுக்தா அமைப்பு மகாராஷ்டிராவில் 1971 தொடங்கப்பட்டது.
  • 1970ல் ஒரிசா மாநிலம் லோக் ஆயுக்தாவிற்கான சட்டத்தை இயற்றிய போதிலும் 1983ம் ஆண்டு தான் ஒரிசாவில் லோக் ஆயுக்தா அமைப்பு நிறுவப்பட்டது.

அமைப்பு வேறுபாடு

  • அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான லோக் ஆயுக்தா செயல்படுவதில்லை.
  • ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா என்ற அமைப்புகள் உள்ளன.
  • பீகார், உத்திரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் லோக் ஆயுக்தா மட்டும் உள்ளது.
  • பஞ்சாப் மற்றும் ஒரிசா மாநிலங்களில் இவ்வதிகாரி லோக்பால் என்றே வழங்கப்படுகிறது.

நியமனம்

  • லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
  • தேர்ந்தெடுக்கும் போது ஆளுநர், மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் கலந்து ஆலோசிக்க வேண்டும்

ENGLISH

  • A notable feature of the Lokpal and Lokayukta Bill 2011 which has just been passed in Parliament.
  • States should use their norms to establish Lok Ayukta bodies within one year.
  • Lok Ayukta acts as a people’s grievance redressal and anti-corruption body at the state level. The first Lok Ayukta system in India was started in 1971 in Maharashtra.
  • Although the state of Orissa enacted the Lok Ayukta Act in 1970, the Lok Ayukta system was established in Orissa only in 1983.

Organizational difference

  • Not all states have the same Lok Ayukta.
  • Rajasthan, Karnataka, Andhra Pradesh and Maharashtra have Lok Ayukta and Upalok Ayukta bodies.
  • Bihar, Uttar Pradesh and Himachal Pradesh have only Lok Ayukta.
  • In the states of Punjab and Orissa, this officer is known as Lokpal.

Appointment

  • The Governor appoints the members of the Lok Ayukta and Upalok Ayukta bodies.
  • The Governor, Chief Justice of the State High Court and the Leader of the Opposition in the Legislative Assembly should be consulted during the election.
  1. தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு ஆணையம் 2016 / TAMILNADU LOKAYUKTA 2016

TAMIL

ஊழல் மற்றும் சேவை மறுப்புக்கான விளக்கங்கள்

  • ஊழல் செயல் என்பதன் பொருள்: 1988ம் வருட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்டிக்கத்தக்க அனைத்து செயல்களும், இவற்றில் மக்கள் பிரதிநிதிகளாக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அடங்குவர்.
  • தெரிந்தே சட்டத்திற்கோ விதிமுறைகளுக்கோ புறம்பாக ஒரு பொது ஊழியர் எந்த மனிதருக்கும் தேவையற்ற ஆதாயம் கொடுத்தல் மற்றும் ஒரு பொது ஊழியர் எந்த மனிதரிடமும் ஆதாயம் பெறுதல்.

சேவை மறுப்பு என்பதன் பொருள்

  • தமிழ்நாடு அரசு, அரசு அலுவலகங்களால் கொடுக்கப் பெறும் அத்ைது சேவைகளுக்கும் கால அவகாசங்கள் நிர்ணயித்து அவற்றிற்குப் பொறுப்பான அரசு அலுவலர் ஆகியோரை இந்த சட்டம் கட்டுப்படுத்தும்.
  • அரசு சேவைகள், அவற்றின் கால அவகாசம், அவற்றிற்கு பொறுப்பான அரசு அலுவலர் ஆகியோர் கொண்ட பட்டியல் அரசு இணையதளத்தில் நிரந்தரமாக வெளியிடப்பட வேண்டும்.

பிற விளக்கங்கள்

  • அரசு என்பதற்கு இந்த சட்டத்தில் தமிழ்நாடு அரசு என்பது பொருள்.
  • அரசு அலுவலர் என்பதற்கு தமிழக அரசு வேலைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் என்று பொருள்.
  • பொதுத்துறை என்பது அரசியல் சட்டத்தின் கீழ் அல்லது அரசியல் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது மாநில சட்டசபையின் கீழ் அல்லது மாநில சட்டசபையால் உருவாக்கப்பட்டது
  • பொது ஊழியர் என்னும் பதம் அரசு அலுவலராக இருந்தவர் அல்லது இருப்பவர் என்று பொருள்படும். தமிழ்நாட்டின் முதலமைச்சர், அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொது ஊழியர்களில் அடங்குவர்.
  • மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இந்த சட்டத்தின் கீழ் பொது ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

ENGLISH

Explanations for corruption and denial of service

  • Corrupt act means: All acts reprehensible under the Prevention of Corruption Act, 1988, including all elected representatives of the people to the Tamil Nadu Legislative Assembly.
  • Knowingly giving undue advantage to any person by a public servant in violation of law or regulation and obtaining benefit by a public servant from any person.

Meaning of Denial of Service

  • This Act will regulate the time limits for the services provided by the Government of Tamil Nadu and the government officials responsible for them.
  • The list of government services, their tenure and the government officer responsible for them should be permanently published on the government website.

Other explanations

  • Government in this Act means the Government of Tamil Nadu
  • Government servant means a government employee engaged in Tamil Nadu government jobs.
  • A public sector is an entity under or created by the Constitution or under or created by a State Assembly
  • The term public servant means a person who has been or is a public servant.
  • Public servants include the Chief Minister of Tamil Nadu, all ministers in the Cabinet and members of the Legislative Assembly.
  • And Judges of the Madras High Court shall not be treated as public servants under this Act.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *