TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC – TEST 4: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

  1. இந்தியாவில் ஊழல் / CORRUPTION IN INDIA

TAMIL

  • இந்தியாவில் ஊழல் பெரும் பிரச்சினையாக உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது. வளர்ந்து வரும் நாட்டில் இவ்வூழல் பிரச்சினை அடிப்படை கட்டமைப்பைச் சிதைப்பதாக உள்ளது.
  • ட்ரான்பெரன்சி இன்டர்நேஷனல் 2021 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் 62 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் ஈடுபடுகின்றனர் என ஆய்வில் தெரிய வருகிறது.
  • 2011 ட்ரான்பெரன்சி இன்டர்நேஷனல் உலக அளவில் நடத்திய ஊழல்கள் அடங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா இயற்றிய சில சமூக செலவு திட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் திட்டங்கள் ஊழலுக்கு மிகப் பெரிய காரணங்களாக அமைந்துள்ளன. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை உதாரணங்கள் ஆகும்.
  • நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஒழுங்குமுறை மற்றும் போலீஸ் நிறுத்தங்களுக்கு, போக்குவரத்து சார்ந்த தொழில்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
  • சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்தியாவிலுள்ள ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாகக் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன. எனினும் சுவிஸ் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை ஒரு முழுமையான கட்டுருவாக்கம் மற்றும் தவறானது என்று கூறுகிறார்கள்.

ENGLISH

  • Corruption is a major problem in India. It affects India’s economy very badly. In a developing country this environmental problem is eroding the basic structure.
  • A 2021 survey conducted by Transparency International revealed that more than 62 percent of Indians use bribery or influence to successfully land jobs in public offices.
  • India is ranked 85th in the 2011 Transparency International list of most corrupt countries globally.
  • Some of the social spending programs and licensing programs that India has enacted are major sources of corruption. Examples are Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme and National Rural Health Scheme.
  • For many regulatory and police stops on highways, transport industries are forced to pay billions in bribes annually.
  • There have been widespread allegations in the Indian media that trillions of dollars are stashed in Swiss banks by corrupt people in India. However, Swiss authorities say the allegations are a complete fabrication and false.
  1. ஊழலுக்கான காரணங்கள் / REASONS FOR CORRUPTION

TAMIL

  • அதிகக் கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் வழங்கும் அமைப்புகள், பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான அதிகாரத்துவம் மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்கக் கட்டுப்பாட்டு நிறுவனங்களில் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை, வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களில் அடங்கும்.
  • ஊழலின் அளவு மற்றும் ஊழலைக் குறைக்க பல்வேறு மாநில அரசின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

அதிகாரத்துவம்

  • வரி மற்றும் இலஞ்சம் மாநில எல்லைகளுக்கு இடையே வழக்கமானது. லாரி உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 22-200 கோடி லஞ்சம் செலுத்துகிறார்கள் என்று ட்ரான்சிபெரன்சி இன்டர்நேஷனல் மதிப்பிட்டுள்ளது.
  • அரசாங்கக் கட்டுப்பாட்டு 43 % மற்றும் போலீஸ் 45% பணத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.
  • சோதனைச்சாவடிகள் மற்றும் நுழைவுவாயிலில் ஒரு வாகனம் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அத்தகைய நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அரசு அதிகாரிகளால் பணம் பிடுங்கப்படுகிறது.
  • இந்த நிறுத்தங்களால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு ஒரு முக்கியமான தேசிய கவலை ஆகும்.

நிலம் மற்றும் சொத்து

  • அதிகாரிகள் மாநில சொத்தை திருடுவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் நகராட்சி மற்றும் இதர அரசாங்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், நீதித்துறை அதிகாரிகள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் சட்ட விரோத வழிகளில் நிலத்தை பெற்று மேம்படுத்தி விற்கிறார்கள்.

ஒப்பந்த செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தம் வழங்குதல்

  • இந்தியாவில் ஆகஸ்ட் 25, 2005 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் செயலாக்கப்பட்டது.
  • பின்னர், 2011ல் இந்தியாவில் இருக்கும் மற்ற வறுமை குறைப்புத் திட்டங்களைவிட இத்திட்டம் எவ்விதத்திலும் அதிக பயனளிக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.
  • MGNREGA வில் சிறந்த நோக்கங்கள் இருந்த போதிலும், போலி கிராமப்புற ஊழியர்கள், இந்த திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட உள்கட்டமைப்பு தரம் சரியில்லாமை, ஊழல் மிகுந்த அதிகாரிகள் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சர்ச்சைகளுடன் தொடர்புடையதாக இருந்தது.

மருத்துவம்

  • அரசு மருத்துவமனைகளிலும் ஊழல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக மருத்துவரைப் பார்ப்பதற்கு, ஆலோசனை பெறுவதற்கு இலஞ்சம் வாங்குவது, போலி மருந்துகள் விற்பது ஆகியவை அடங்கும்.
  • தேசிய ஊரக, சுகாதாரத் திட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது ஒரு சுகாதாரம் தொடர்பான அரசாங்கத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தை இந்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் 2005ல் இருந்து இயங்கி வருகிறது. இத்திட்டத்திற்கான செலவை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
  • சுமார் 1 சதவீதத்திற்கு ஒவ்வொரு ஆண்டாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் மேலும் ஒரு பெரிய அளவிலான ஊழல் சூழ்ந்துள்ளது. பல உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இத்திட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் மோசடியால் சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

வருமானவரித்துறை

  • இந்திய வருமானத்துறை அதிகாரிகள் இலஞ்சத்திற்காக வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுடன் கூட்டு சேர்வது பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • ஆகஸ்ட் 2011 ஆரம்பத்தில் இரும்புத்தாது சுரங்க முறைகேடு, இந்திய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. செப்டம்பர் 2011இல் ஜனார்தனா ரெட்டி கர்நாடகாவின் சட்டமன்ற உறுப்பினர் அவரது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் சட்ட விரோதமாக இரும்புத்தாது
  • வெட்டி எடுத்ததற்காகவும், ஊழலுக்காகவும் கைது செய்யப்பட்டார். > அரசு சுரங்கத்துறை அதிகாரிகளிலிருந்து துறைமுக அதிகாரிகள் வரை இவருக்கு உடந்தையாக இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள்
  • கப்பட்ட இரும்புத்த சீனாவிற்கு சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத்தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கு இலஞ்சம் பெற்றனர்.

ஓட்டுநர் உரிமம்

  • இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஒருவருக்கு குறைந்த ஒட்டும் திறன் இருந்தாலும் உரிமம் தரப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டது.
  • நிறைய மக்கள் அதிகாரப்பூர்வ கட்டணத்திற்கு மேல் குறிப்பிடத்தக்க பணம் செலுத்த தயாராக இருந்தனர். இந்த கூடுதல் கட்டணம் முகவர்கள் வழியாக அதிகாரிகளை சென்றடைந்தன.

கருப்புப் பணம்

  • சட்டவிரோதமாக ஒருவரிடம் பணம் இருந்தால் அது கருப்புப் பணம் ஆகும். கருப்புப் பணம் இருப்பதற்கு இரண்டு சாத்திய வழிகள் உள்ளன என்பது இந்திய அரசு குறிப்பிடுகின்றது.
  • போதை மருந்து விவகாரம், பயங்கரவாதம், ஊழல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முதல் வழி ஆகும்.
  • சட்டரீதியாக பணம் வந்தாலும் அதை வருமானத்தில் காட்டாமலோ, வரிகள் கட்டாமலோ இருப்பது இரண்டாவது வழி ஆகும்.

ENGLISH

  • The causes of corruption in India include excessive regulation, complex tax and licensing systems, distinct bureaucracy and discretionary powers for each of the various government departments, monopoly over certain goods and services in government-controlled companies, and lack of transparent laws and procedures.
  • There are significant differences in the level of corruption and the efforts of various state governments to reduce corruption.

Bureaucracy

  • Taxes and bribery are common across state borders. Transparency International estimates that lorry owners pay Rs 22-200 crore in bribes annually.
  • Government controls 43% and police share 45% of the money.
  • A vehicle is parked for up to 11 hours per day at check posts and gates. Almost 60 percent of such stops are extortion by government officials.
  • The loss of productivity caused by these shutdowns is a critical national concern.

Land and Property

  • Officials allegedly steal state property. All over India municipal and other government officials, elected politicians, judicial officials, real estate developers and law enforcement officers acquire, develop and sell land through illegal means.

Contractual processes and contract award

  • Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme was implemented in India on August 25, 2005.
  • Later, in 2011, the program was criticized as being no more effective than other poverty reduction programs in India.
  • Despite the best intentions, MGNREGA was associated with controversies such as bogus rural employees, poor quality of infrastructure built under the scheme, and looting of money by corrupt officials.

Medicine

  • There is corruption in government hospitals too. Examples include bribery to consult a doctor, selling fake medicines.
  • There are massive allegations of corruption in the National Rural and Health Scheme. It is a health related government scheme.
  • This scheme has been running since 2005 by Ministry of Health, Government of India. Expenditure on this scheme, in India’s GDP
  • Increased by about 1 percent each year. Another large-scale corruption surrounds the scheme. Several high-ranking government officials were arrested. It is said that there has been a loss of around 10,000 crore rupees due to corruption and fraud in the scheme.

Income Tax Department

  • It has been mentioned in many places that Indian revenue officials colluding with tax evaders for bribes.
  • In early August 2011, the iron ore mining scandal caught the attention of the Indian media. In September 2011, Janardhana Reddy, Member of the Legislative Assembly of Karnataka, found illegal iron ore in his home state of Karnataka.
  • Arrested for extortion and corruption. > From government mining officials to port officials, he was accused of complicity. These officials
  • Received bribes for illegal export of illegally mined iron ore to iron ore China.

Driving license

  • A study conducted in India also found that a driver’s license is granted even if a person has low adhesiveness.
  • Many people were willing to pay significantly more than the official rate. These surcharges reached the authorities through agents.

Black money

  • If one has money illegally it is black money. The Government of India points out that there are two possible ways of existence of black money.
  • Illegal activities like drug issue, terrorism, corruption are the first way.
  • The second option is to not show the money in income or pay taxes even if it comes legally.
  1. ஊழல் தடுப்புச் சட்டம் – 1988 / PREVENTION OF CORRUPTION ACT – 1988

TAMIL

  • அரசு ஊழியர் தன் கடமையைச் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியான ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக் கொள்ளுதல் ஆகியவை ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஊழல் எனும் குற்றச் செயலாகும்.
  • ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாமல் தடுக்க அரசு ஊழியர்க்கு கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 8 மற்றும் 9-ன் கீழ் ஊழல் ஆகும்.
  • ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 10-ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார்.
  • அரசு ஊழியர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 13-ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார்.

ENGLISH

  • It is an offense under section 7 of the Prevention of Corruption Act 1988 to receive or agree to receive any money or thing other than statutory remuneration for a public servant to perform or not perform his duty or to favor or disadvantage him in a particular function.
  • Corruption under Sections 8 and 9 of the Prevention of Corruption Act 1988 is when a person or several persons give or receive assistance to a public servant to prevent the public servant from performing or refraining from performing a particular duty.
  • A public servant who is complicit in the solicitation of an individual bribe becomes corrupt under Section 10 of the Prevention of Corruption Act, 1988.
  • A public servant becomes corrupt under Section 13 of the Prevention of Corruption Act 1988 for offenses such as amassing wealth beyond his income.
  1. என்.என்.வோரா குழு அறிக்கை / NN VORA COMMITTEE REPORT

TAMIL

  • அக்டோபர் 1993-60 முன்னாள் இந்திய மத்திய உள்துறை செயலாளர் என்.என்.வோராவால் சமர்ப்பிக்கப்பட்ட வோராவின் அறிக்கை, குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே பிரச்சினைகளை பற்றிக் கூறியது.
  • இந்த அறிக்கை கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கத்தை இயக்கும் குற்றவாளி கும்பல்களை எடுத்துக் காட்டியது.
  • மேலும் இந்த அறிக்கை குற்றவாளி கும்பல்களுக்கு அரசியல்வாதிகளால், அரசியல் கட்சிகளால் மற்றும் அரசு செயலர்களால் தொகுக்கப்படும் ஆதரவை விவாதித்தது.
  • இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய பிரச்சினையாகவும், தடங்கலாகவும் இருப்பதற்கு ஊழலும், அரசியலில் மாற்றமின்மையும் காரணங்களாகும்.

ENGLISH

  • October 1993-60 Vora’s Report, submitted by former Indian Union Home Secretary NN Vora, dealt with issues between criminals, politicians and officials.
  • The report, which comes from a relationship with the government, highlighted criminal gangs running an almost parallel government. The report also discussed the support accorded to criminal gangs by politicians, political parties and government secretaries.
  • Corruption and lack of change in politics are the major problems and hindrances to India’s development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *