TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 7: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

  1. மத்திய கண்காணிப்பு ஆணையம் / CENTRAL VIGILANCE COMMISSION

TAMIL

  • மத்திய அரசின் ஊழல்களைத் தடுக்கும் ஒரு முக்கிய அமைப்பு இது.
  • மத்திய அரசின் ஒரு தீர்மானத்தின் மூலம் 1963ல் இது உருவாக்கப்பட்டது.
  • சந்தானம் கமிட்டி பரிந்துரைப்படி உருவாக்கப்பட்டது
  • CVC ஆனது அரசியலமைப்பு பெற்ற நிறுவனமும் அல்ல.
  • பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும் அல்ல. செப்டம்பர் 2003ல் பாராளுமன்றம் இவ்வமைப்பிற்கு அங்கீகாரம் அளித்து.

அமைப்பு

  • இது பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு.
  • ஒரு மத்திய கண்காணிப்பு அணையர்/தலைவர் மற்றும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்களையும் கொண்டுள்ளது.
  • இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரதமர் (குழுவின் தலைவர்), மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் நபரைக் குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

பதவிக்காலம்

  • ஆணையர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் அல்லது 65 வயது. இவற்றில் எது முந்தையதோ அதன்படி பதவி விலக வேண்டும்.
  • பதவிக்காலம் முடிந்த பிறகு அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் எப்பதவியையும் வகிக்க இயலாது.
  • தற்போது தலைமை கண்காணிப்பு ஆணையர் கே.வி.சௌத்ரி

பதவி நீக்கம்

  • வேலை செய்யும் திறனற்றவராய் இருத்தல். நீதிக்குப் புறம்பாக செயல்படுதல்.
  • பணம் வருமானம் வரும் தொழிலில் ஈடுபட்டிருத்தல்.
  • உடலளவிலோ, மனதளவிலோ இப்பணியினை செய்ய தகுதியில்லாமல் இருத்தல் (குடியரசுத்தலைவர் கருத்துப்படி).
  • அலுவல்களைப் பாதிக்கும் வண்ணம் ஏதேனும் வருவாய் மற்றும் பிறவற்றைப் பெறுதல். மேற்குறிப்பிட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது தவறான
  • செய்கைகள் அல்லது வேலை செய்வதற்கு தகுதியற்ற நிலை போன்ற காரணங்களினாலோ குடியரசுத்தலைவர் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்யலாம்.
  • எனினும் இது குறித்து குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்றத்திடம் தெளிவுபடுத்திக் கொள்ளும்போது, உச்சநீதிமன்றம் ஆணையர்களின் பதவி நீக்கத்திற்கு பரிந்துரைப்பின் குடியரசுத்தலைவர் ஆணையர்களை பதவி நீக்கலாம்.

சம்பளம் மற்றும் இதர சலுகைகள்

  • மத்திய பணியாளர் தேர்வு வாரியம் தலைவருக்கான சலுகைகள் மற்றும் சம்பளம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு வழங்கப்படும்.
  • மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உறுப்பினருக்கும் சலுகைகள் மற்றும் சம்பளம் மற்ற இரு ஆணையர்களுக்கு வழங்கப்படும்.

பணிகள்

  • ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசின் ஊழியர்கள் அல்லது மத்திய அரசு நிறுவனம் புரியுமாயின் அதை விசாரிக்கும்.
  • ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை கீழ்க்குறிப்பிட்ட அலுவலர்கள் புரிந்தால் அவ்வழக்கை விசாரணை செய்யும்.
  • மத்திய அரசில் பணிபுரியும் அகில இந்திய பணியாளர்கள்,, மத்திய அரசின் குரூப் ஏ அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட நிலையில் வேலையிலுள்ள அதிகாரிகள்.
  • டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டம் 1946ன் கீழ் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பிற்கு அதன் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்துகிறது.
  • டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு விசாரிக்கும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து மேற்பார்வை செய்கிறது.
  • மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் கேள்விகளுக்கு அறிவுரை வழங்குகிறது.

CVC செயல்பாடுகள்

  • அதனுடைய பணிகளை தன் தலைமையிடத்திலிருந்தே (நியூடெல்லி) மேற்கொள்கிறது.
  • ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாரங்களும் இந்நீதிமன்றத்திற்கு உண்டு.
  • மத்திய அரசிலிருந்தோ அல்லது மத்திய அரசு நிறுவனங்களிலிருந்தோ தேவையான தகவல்களைக் கேட்டுப் பெறும் அதிகாரம் இவ்வமைப்பிற்கு உண்டு.
  • தனது அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படும் புகார்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அவ்வறிக்கை / அறிவுரையின் பேரில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். எடுக்காமல் போகலாம்.
  • எனினும் CVC ன் அறிவுரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
  • CVC ஆண்டுதோறும் தனது செயல்பாடுகள் குறித்து அறிக்கையைக் குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கிறது.
  • குடியரசுத்தலைவர் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கிறார்.
  • மத்திய அரசானது அகில இந்திய பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கான ஊழல் மற்றும் ஒழுங்கு தொடர்பான விதிமுறைகளை விதிக்கும் பொழுது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் ஆலோசனை பெறவேண்டும்.

ENGLISH

  • It is an important body to prevent corruption in the central government. It was formed in 1963 by a resolution of the Central Government. (Developed on recommendation of Chandanam Committee)
  • CVC is also not a constitutional body. Nor is it a body recognized by Parliament. In September 2003, Parliament approved the organization.

Composition

  • It is a multi-member body.
  • The Central Vigilance consists of a Commissioner/Chairman and two Vigilance Commissioners.
  • The members of this Commission are nominated by the President by a committee consisting of the Prime Minister (Chairman), the Union Home Minister and the Leader of the Opposition in the Lok Sabha. appoints as such

Tenure

  • The tenure of Commissioners is 4 years or 65 years. Whichever of these is earlier should resign.
  • After completion of term they cannot hold any post in Central and State Governments.
  • At present the Chief Vigilance Commissioner is KV Chowdhury

Dismissal

  • Being unable to work. Acting unjustly.
  • Engaged in income generating business.
  • Being physically or mentally unfit for the job (in the opinion of the President).
  • Receiving any revenue and other things affecting the operations. If involved in any of the above reasons or wrong
  • The President may dismiss the Commissioners for reasons of misconduct or unfitness to serve.
  • However, when the President clarifies the matter to the Supreme Court, the President may dismiss the Commissioners if the Supreme Court recommends the dismissal of the Commissioners.

Salary and other benefits

  • Allowances and Salary of Central Staff Selection Board Chairman will be given to Central Corruption Vigilance Commissioner. The Central Staff Selection Board member will also be given allowances and salary to the other two commissioners.

Assignments

  • Any offense under the Prevention of Corruption Act shall be investigated by a Central Government employee or a Central Government agency.
  • If any of the offenses under the Prevention of Corruption Act are found, the following officers will investigate the case.
  • All India employees working in the Central Government, Group A officers of the Central Government and officers employed in specified positions in the Central Government offices.
  • The Delhi Special Police Force Act 1946 directs the Delhi Special Police Force to perform its duties.
  • The Delhi Special Police Organization oversees the progress of the cases being investigated.
  • Advises Central Government and its agencies on queries.

CVC functions

  • It carries out its functions from its headquarters (New Delhi).
  • This Court has all the powers of a Court of Law.
  • This organization has the authority to seek and receive necessary information from the central government or central government agencies.
  • It will file a report on complaints received by its organization. Central Government may take action on such report/advice. May not take.
  • However, the central government should clarify the reason for rejecting the recommendations of the CVC.
  • The CVC submits an annual report on its activities to the President.
  • The President presents the report to both Houses of Parliament.
  • The Central Government shall consult the Central Corruption Vigilance Commission while laying down rules relating to corruption and discipline for all India employees and Government servants.
  1. லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) / LOK ADALAT (PEOPLE’S COURT)

TAMIL

  • லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதான நிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.

வரலாறு

  • இது ஒரு மாற்று முறையில் சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும்.
  • லோக் என்பது மக்களையும் அதாலத் என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும்.
  • முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் ஜீனாகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

சிறப்புகள்

  • மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் தீர்வு கண்டு விடலாம்.
  • இந்த நீதிமன்றங்களில் தீர்வு காணப்பட்டால் அதற்கு மேல் முறையீட்டிற்குப் போக முடியாது.

தீர்க்கப்படும் வழக்குகள்

  • காசோலை தொடர்பான வழக்குகள்
  • வாகன விபத்து வழக்குகள்
  • குடும்பப் பிரச்சினைகள் தொடர்பன வழக்குகள்
  • தொழில் தகராறுகள்
  • தொழிலாளர் பிரச்சினை தொடர்பான வழக்குகள்
  • குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ள தன்மையுள்ள வழக்குகள் நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள்
  • வங்கிக் கடன் பிரச்சினைகள் வாடகை விவகாரங்கள்
  • விற்பனை வரி, வருமானவரி, மறைமுகவரி தொடர்பான பிரச்சினைகள்.

மெகா லோக் அதாலத்

  • இந்தியாவில் நவம்பர் 23, 2013 அன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத் நாடு முழுவதும் நடைபெற்றது.
  • வட்டார அளவிலான கிழமை நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த மெகா அதாலத் நடத்தப்பட்டது.
  • ஒரே நாளில் இந்தியா முழுவதிலும் 35 இலட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 13 லட்சத்து 62 ஆயிரம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

ENGLISH

  • People’s Court known as Lok Adalat is a court created by the Government of India to solve the problems of the people through peace and reconciliation.

History

  • It is an alternative dispute resolution mechanism.
  • Lok means people and Adalat means court. The first People’s Court known as Lok Adalat was held on March 14, 1982 at Zeenagarh in the state of Gujarat.

Specialties

  • Through People’s Court, not only the cases pending in the court but also the disputes pending before the court can be resolved. Once settled in these courts, there is no further appeal.

Cases to be settled

  • Check related cases
  • Motor vehicle accident cases
  • Family issues related cases
  • Industrial disputes
  • Cases related to labor issue
  • Conciliatory cases in criminal cases are cases relating to land acquisition and compensation
  • Bank loan issues Rent issues
  • Issues related to Sales Tax, Income Tax, Indirect Tax.

Mega Lok Adalat

  • In India on November 23, 2013 Mega Lok Adalat was held across the country to facilitate speedy resolution of cases.
  • This mega adalat was held in all courts across the country, starting from the District Court and up to the Supreme Court.
  • 35 lakh cases were settled all over India in a single day.
  • In Tamil Nadu and Puducherry, 13 lakh 62 thousand cases were solved in a single day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *