TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC – TEST 6: நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது

இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.

  1. இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை / COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA

TAMIL

  • சரத்து 148 – 151
  • சரத்து 148(1) இந்தியாவிற்குக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத்தலைவர் ஒருவர் இருக்க வேண்டும்.
  • பொதுப்பணத்தின் பாதுகாவலர்
  • நாட்டின் முழு நிதி அமைப்பையும் மத்திய-மாநில இரு நிலைகளிலும் கட்டுப்படுத்துகிறார்.
  • நிதி நிர்வாகத்துறையில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவது அவரது கடமை. இந்தியாவின் ஜனநாயக ஆட்சி அமைப்பின் அரண்களில் ஒருவர்.
  • இந்திய அரசியலமைப்பின் கீழ் சிஏஜி மிக முக்கியமான அதிகாரியாக இருக்க வேண்டும் என்று டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் கூறினார்.

நியமனம் மற்றும் விதிமுறை

  • சிஏஜி இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.
  • இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவில் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும்.
  • தனது அலுவலகத்தின் கடமைகளை முறையாகவும், உண்மையாகவும், அவரது திறமை, அறிவு மற்றும் நியாத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக செய்ய வேண்டும்.
  • அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும்.

பதவிக்காலம் மற்றும் பதவி நீக்கம்

  • ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பார்.
  • ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதன் மூலம் அவர் எப்போது வேண்டுமானாலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம்.
  • உச்சநீதிமன்ற நீதிபதியைப் போலவே குடியரசுத்தலைவராலும் சிஏஜியை பதவி நீக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் அவரை பதவி நீக்க முடியும். (சரத்து 148)
  • அவரது நியமனத்திற்கு பிறகு அவரது சம்பளம் அல்லது விடுப்பு, ஓய்வூதியம் அல்லது ஓய்வு பெறும் வயது தொடர்பான அவரது உரிமைகள் எதுவும் மாற்றப்படக்கூடாது.
  • சிஏஜி அலுவலகத்தின் நிர்வாகச் செலவுகள் அதே அலுவலகத்தில் பணியாற்றும் நபர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட இந்திய ஒருங்கிணைந்த நிதியில் வசூலிக்கப்படுகிறது. இதனால் அவை நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு உட்பட்டது அல்ல.

கடமைகள் மற்றும் அதிகாரங்கள்

  • திரட்டு நிதியிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கணக்காளர் என்ற முறையில் கட்டுப்பாடு வைத்திருக்கிறார். (முன்பு) தற்போது தணிக்கை மட்டும்.
  • தணிக்கையாளர் என்ற முறையில் மத்திய/மாநில அரசுகளின் எல்லா செலவுகளையும் தணிக்கை செய்கிறார்.

கணக்குகள் படிவம் (சரத்து 150)

  • குடியரசத்தலைவர் தரும் படிவத்தில் மத்திய/மாநில அரசுகளின் கணக்கை வரவு வைக்க வேண்டும்.

அறிக்கைகள்

  • மத்திய அரசின் கணக்குகளை குடியரசுத்தலைவர் முன் வைப்பார். குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தில் முன் வைப்பார். சரத்து 151(1)
  • மாநில அரசில் கணக்குகளை ஆளுநர் முன் வைப்பார். ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் முன் வைப்பார். சரத்து 151(2)

பணிகள்

  • மக்களின் திரட்டு நிதி சட்டப்படி செலவு செய்யப்படுவதை உறுதி செய்வார். அரசு நிறுவனங்களின் கணக்குகளையும் தணிக்கை செய்வார்.
  • பொது கணக்குகுழுவின் நண்பர் மற்றும் வழிகாட்டியாக செயல்படுவார்.
  • குடியரசுத்தலைவரால் கையொப்பமிட்ட கணக்குகளை சரி பார்ப்பார்.
  • முதல் (AG – V.நரஹரி (1948-1954) தற்போதைய (AG- கிரிஸ் சந்திர முர்)

ENGLISH

  • Article 148 – 151
  • Article 148 (1) India shall have a Director of Accounts and Audit.
  • Custodian of public funds
  • He controls the entire financial system of the country at both the central and state levels.
  • His duty is to uphold the Constitution of India and Acts of Parliament in the field of financial administration. One of the bulwarks of India’s democratic governance system.
  • PR Ambedkar said that CAG should be the most important authority under the Constitution of India.

Appointment and Term

  • The CAG is appointed by the President of India.
  • Have true faith and loyalty to the Constitution of India. To uphold the sovereignty and integrity of India.
  • To discharge the duties of his office duly and faithfully and to the best of his ability, knowledge and judgment.
  • Constitution and laws must be upheld.

Tenure and Removal

  • He will hold office for six years or till the age of 65 years whichever is earlier.
  • He can resign his office at any time by sending a letter of resignation to the President.
  • Like a Supreme Court judge, the President can also remove the CAG. In other words, the President can remove him on the basis of a resolution passed by both Houses of Parliament with a special majority on the ground of proven misconduct or incapacity. (Article 148)
  • After his appointment there shall be no alteration of his salary or his entitlements in respect of leave, pension or retirement age.
  • Administrative expenses of the office of CAG including salaries and pensions of the persons working in the same office are charged to the Consolidated Fund of India. Thus they are not subject to a vote of Parliament.

Form of Accounts (Article 150)

  • The account of Central/State Governments should be credited in the form provided by the President.

Reports

  • The accounts of the Central Government shall be placed before the President. The President will present it to the Parliament. Article 151(1)
  • The Governor lays the accounts before the State Government. The Governor shall lay it before the State Legislature. Article 151(2)

Duties and Powers

  • As an accountant, he has control over the money drawn from the fund. (Previously) Currently audit only.
  • As Auditor audits all expenditure of Central/State Govt.

Assignments

  • He will ensure that people’s accumulated funds are spent according to law. He will also audit the accounts of government institutions.
  • Acts as a friend and mentor to the Public Accounts Committee.
  • He will audit the accounts signed by the President.
  • First (AG – V.Narahari (1948-1954) Current (AG- Kris Chandra Mur)
  1. மத்திய புலனாய்வுத்துறை / CENTRAL BUREAU OF INVESTIGTION – CBI

TAMIL

  • மத்திய புலனாய்வுத்துறை சந்தானம் கமிட்டி பரிந்துரையால் 1963 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் தீர்மானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
  • தற்போது கேபினட் செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமாக செயல்படுகிறது. மத்திய அரசின் முக்கிய விசாரணை அமைப்பாக சிபிஐ உள்ளது.
  • ஊழலைத் தடுப்பதிலும், நிர்வாகத்தில் நேர்மையைப் பேணுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மற்றும் லோக்பால் ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.

பணிகள்

  • ஊழல், இலஞ்சம் மற்றும் நடத்தை மீறிய மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் குறித்த வழக்குகளை விசாரித்தல்.
  • தேசிய அல்லது உலக அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்களை விசாரிக்கிறது. நிதி,பொருளாதார சட்டங்கள், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடு, கலால் மற்றும் சுங்கவரி, வருமானவரி, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை போன்றவை தொடர்பான வழக்குகளை அத்துறைகள் விரும்பினால் சிபிஐ விசாரிக்கும். மற்ற ஊழல் தடுப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.
  • மாநில அரசுகள் விரும்பிக் கேட்பின் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும்.

அமைப்பு

  • ஊழல் தடுப்பு பிரிவு
  • பொருளாதார குற்றப்பிரிவு
  • சிறப்பு குற்றப்பிரிவுக்கொள்கை மற்றும் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு பிரிவு
  • நிர்வாகப்பிரிவு
  • வழக்கு விசாரணை இயக்குநரகம்
  • மத்திய தடய அறிவியல் ஆய்வகம்

நியமனம்

  • பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிஐ இயக்குநரை மத்திய அரசு நியமிக்கும்.

சிபிஐ அகாடமி

  • சிபிஐ அகாடமி உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் அமைந்துள்ளது. 1996 இல் செயல்படத் தொடங்கியது. முன்னதாக புது தில்லியில் உள்ள சிபிஐ பயிற்சி மையத்தில் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

ENGLISH

  • The Central Intelligence Agency was brought in by a resolution of the Ministry of Home Affairs in 1963 on the recommendation of the Santhanam Committee.
  • Currently functioning as an office attached under the Cabinet Secretariat. CBI is the main investigative agency of the central government. It plays an important role in preventing corruption and maintaining integrity in administration. It also assists the Central Vigilance Commission and the Lokpal.

Assignments

  • Investigating cases of corruption, bribery and misbehavior of central and state government authorities.
  • Investigates crimes of national or global importance. CBI will investigate cases related to finance, economic laws, export, import control, excise and customs, income tax, foreign exchange regulation etc. if the departments so desire. It also coordinates the activities of other anti-corruption agencies.
  • State Governments will try cases of public importance at will.

Composition

  • Anti Corruption Unit
  • Economic Offenses Section
  • Special Crime Branch and International Police Cooperation Unit
  • Administrative division
  • Directorate of Prosecutions
  • Central Forensic Science Laboratory

Appointment

  • The Central Government appoints the CBI Director on the recommendation of a three-member committee nominated by the Prime Minister, the Leader of the Opposition in the Lok Sabha and the Chief Justice of India.

CBI Academy

  • CBI Academy is located in Ghaziabad, Uttar Pradesh. Started functioning in 1996. Earlier the trainings were conducted at the CBI Training Center in New Delhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *